Showing posts with label சுதேசி. Show all posts
Showing posts with label சுதேசி. Show all posts

Wednesday, July 30, 2014

மரபணு மாற்றுப் பயிர்கள் அனுமதிக்கப்பட்டதா?

மரபணு மாற்றுப் பயிர்கள் அனுமதிக்கப்பட்டதா?
15 மரபணு மாற்று பயிர்கள்(அரிசி, கடுகு, பருத்தி கத்திரி போன்றவை) சோதனை ரீதியில் பயிரிடுவது குறித்தான அனுமதியை வழங்கலாம் என Genetic Engineering Appraisal Committee (GEAC) என்ற ஒரு நிபுணர் குழு பரிந்துரைத்தது.
அப்போது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாக்ஷ் ஜாவேத்கர் கீழ்க்கண்டவாறு ட்வீட்டர் செய்தி அனுப்பினார்.
 "Field trials of genetically modified crops is not a government decision. It is a recommendation of a Committee."
இது ஏற்கனவே கடந்த நான்கு மாதங்களில் 60 மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்தான ஒப்புதலைக் கொடுத்துள்ளது.
முந்தைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி 100 பயிர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
பாராளுமன்ற நிலைக்குழு மற்றும் உச்சநீதிமன்றமும் தான் மேற்கூறிய நிபுணர் குழுவை அமைத்தன.
தற்போது சுதேசி விழிப்புணர்வு இயக்கமும், பாரதீய கிஸான் சங்கமும் இணைந்து அமைச்சர் ஜாவேத்கரை சந்தித்து இந்த மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தின.
அவர்களிடம் நிபுணர் குழு பரிந்துரை மீது இன்னும் அரசு முடிவு எடுக்கவில்லை. அவசரமாக முடிவு எடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். 
மரபணு மாற்றுப் பயிர்களை சோதனை ரீதியில் பயிரிடுவது என்பது ஒரு நிபுணர் குழுவின் பரிந்துரைதான்; அது அரசின் முடிவல்ல. அரசு முடிவும் எடுக்கவில்லை.
ஆனால் போலி ‘மதச்சார்பின்மைவாதிகளும்’, ‘பரதேசி’க் குழுக்களும் இவ்விசயத்தில் வதந்திகளை பரப்புகின்றன.

ஆதாரங்கள்:
1.        http://ibnlive.in.com/news/field-trial-of-gm-crops-a-suggestion-not-decision-javadekar/489144-37-64.html
2.        http://www.deccanchronicle.com/140730/nation-current-affairs/article/genetically-modified-crops-may-risk-food-security

3.        http://www.financialexpress.com/news/sangh-says-gm-trials-on-hold-no-decision-claims-govt/1275013