Wednesday, July 30, 2014

ரயில் கட்டணம் உயர்த்த்ப்பட்ட விசயம் குறித்து போலி நடுநிலை,மதச்சார்மின்மைவாதிகளின் கள்ள மௌனம்!

ரயில் கட்டணம் உயர்த்த்ப்பட்ட விசயம் குறித்து போலி நடுநிலை,மதச்சார்மின்மைவாதிகளின் கள்ள மௌனம்!
1.        ரயில் கட்டணம் (பயணம்-10%, சரக்கு-5%) உயர்த்தப்பட வேண்டும் என ரயில் போர்டு பிப்ரவரி 05-02-2014ல் ரயில்வே அமைச்சகத்திடம் கருத்து கூறியது.
2.        இதை ஐ.மு.கூ. அரசின் ரயில்வே அமைச்சர் கார்கே அதை ஒப்புக் கொண்டு, பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஒப்புதலும் பெறுகிறார்.
3.        இடைக்கால ரயில்வே பட்ஜெட் தாக்கலில் இந்த உயர்வு முன்வைக்கப்படுகிறது.
4.        சரக்கு கட்டண உயர்வு ஏப்ரல் 1 அன்றும், மே1 அன்று பயணக் கட்டண உயர்வும் என அறிவிப்பு.
5.        தேர்தல் விதிமுறைகள் காரணமாக இவை மே 16க்கு ஒத்திவைப்பு.
6.        தேர்தல் முடிவு வெளியான மே16ல் இந்த உயர்வு அமலாவதை கார்கே நிறுத்தி வைக்கிறார்.
7.        ஏற்கனவே முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புதல் பெற்றதை இப்போதைய அரசு அமல் படுத்துகிறது.
8.         இதுபோலவே, ராணுவ தலைமை தளபதி நியமனத்தை பாஜக கடுமையாக எதிர்த்தது. இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறது.
2014 பிப்-மார்ச்சில் ஐ.மு.கூ. அரசால் ஒப்புதல் பெறப்பட்ட கட்டண உயர்வை தற்போதைய அரசு அமல்படுத்தும் நிலை குறித்து விவாதிக்கும் போது, சம்பந்தம் இல்லாமல், போலி ‘நடுநிலைமைவாதிகளும்’ போலி ‘மதச்சார்பின்மைகளும்’ 2013ல் மோதி அனுப்பிய ட்வீட்டர் செய்தியை வெளியிட்டு வந்தன. இது அவர்களின் சிந்தனை வறட்சியைக் காண்பிக்கிறது.

No comments:

Post a Comment