மத்திய அரசின் சமூக ஊடகங்களில் ஹிந்தி குறித்து:
ஊடகங்கள் ஹிந்தி குறித்த சுற்றறிக்கையை வெகுவாக விமர்சித்தன.
உண்மை நிலையை மறைத்து பேதங்களை வளர்க்க முயன்றன.
இது உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழிக்கான பிரிவின் வழக்கமான
சுற்றறிக்கை. இந்த துறையின் பொறுப்பதிகாரி அவ்வப்போது தனது கடமையை இம்மாதிரியான சுற்றறிக்கைகளை
வெளியிடுவதன் மூலம் செய்வார்.
Ø
இந்த சுற்றறிக்கையை
வெளியிட மார்ச் 10ல் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Ø
மே 27ல் இத்துறையின்
இயக்குநர் அவதேஸ்குமார் மிஸ்ராவால் வெளியிடப்படுகிறது.
Ø
அதாவது மோதி அரசு
பதவியேற்ற மறுநாள்.
Ø
அதாவது ராஜ்நாத்சிங்
உள்துறை அமைச்சராக பொறுப்பேற்பதற்கு இரண்டு நாள் முன்னதாக. ஆம். சுற்றறிக்கை வெளியிடப்பட்டு
இருநாள் கழித்துதான் ராஜ்நாத்சிங் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்கிறார்.
Ø
மிக முக்கியமானது
இச்சுற்றறிக்கை பட்டியல் வகை ஏ பிரிவு மாநிலங்களுக்கானது. அதாவது ஹிந்தியை அலுவல் மொழியாக
பயன்படுத்தும் மாநிலங்களுக்கானது.
Ø
ஆனாலும் ‘நடுநிலை’
ஊடகங்கள் இது மோதி அரசின் செயலாக விமர்சித்து தங்கள் ’நடுநிலை’யை நிருபித்தன.
"The home ministry has
seen that officials of various government ministries, departments, corporations
and government banks have official accounts on social networking websites like
Twitter, Facebook, Google, blogs, YouTube etc...but they ignore use of
Hindi...and only use English while writing on them,"
"It is ordered that
government employees and officials of all ministries, departments, corporations
or banks, who have made official accounts on Twitter, Facebook, Google, YouTube
or blogs should use Hindi, or both Hindi and English but give priority to Hindi."
Ø
உள்துறை
அமைச்சகம் புதியதாக உத்தரவு வெளியிடவில்லை. அலுவல்ரீதியாக அரசின் இணையத் தளங்களில்
என்ன மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறதோ, அது சமூக இணையத் தளங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment