Wednesday, July 30, 2014

கோபால் சுப்பிரமணியம் என்ற உத்தமர்

கோபால் சுப்பிரமணியம் என்ற உத்தமர்
கோபால் சுப்பிரமணியம் ஏன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்ற  ’நடுநிலை’ ஊடகங்களும், போலி ‘மதச்சார்பின்மைவாதிகளும் இச்சம்பவம் எமர்ஜென்சிக்கு சமம் என்றெல்லாம் கூக்குரல் இட்டன.
செப்டம்பர் 2013ல் ஜனாதிபதி அப்போதைய உள்துறை அமைச்சர் சுசில்குமார் சிண்டே, சட்ட அமைச்சர் கபில் சிபல் ஆகியோருக்கு கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்ட எம்.எல்.ஏ, எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யும் அவசர சட்டம் குறித்து விளக்கம் கேட்டார்.
ஜனாதிபதிக்கு பத்திரிக்கையாளர் ஜே.கோபாலகிருக்ஷ்ணன் ஒரு புகாரை ஏற்கனவே அனுப்பியிருந்தார். (பார்க்க ஆதாரம் 3) அதில் கோபால் சுப்பிரமணியம் 2G வழக்கில் ஈடுபாடு கொண்டதாலும் அவர் நீரா ராடியாவுடன் கொண்ட தொடர்புகள் பற்றிய தொலைபேசி ஆதாரங்கள் போன்றவை உள்ளன என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் எழுப்பியிருந்தார்.
அவசர சட்டம் திரும்பப் பெறப்பட்டது. 2G வழக்கு விசாரணையின் போது சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த கோபால் சுப்பிரமணியம் முக்கிய குற்றவாளியான ஆ.ராசாவின் வழக்கறிஞரை சந்தித்துள்ளார். அதுவும் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பாக, அவரது அலுவலக வளாகத்தில் வரவைத்து. சி.பி.ஐ அதிகாரிகள் இதை எதிர்த்தனர்.
பாஜக 13-11-201ல் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. (பார்க்க ஆதாரம் 4)
ஜே.கோபாலகிருக்ஷ்ணன் அனுப்பிய புகாரை ஜனாதிபதி சட்ட அமைச்சருக்கு அனுப்பினார். நீரா ராடியாவுடன் கோபால் சுப்பிரமணியம் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தை உபயோகிப்பது உட்பட பேசிய தொலைபேசி உரையாடல்கள் ஆதாரமாகவும் அனுப்பப்பட்டது. (பார்க்க ஆதாரம் 2)
உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் முறைப்படி பரிசீலிக்கப்பட்ட நான்கு பேரின் தகுதிகள் குறித்து விசாரிக்கப்பட்டது. கோபால் சுப்பிரமணியம் தவிர மற்றவர்களின் பெயர்கள் ஒப்புதல் ஆகியது. கோபால் சுப்பிரமணியம் பெயர் மீண்டும் பரிபரிசீலினைக்கு அனுப்பப்பட்டது. (பார்க்க ஆதாரம் 1)
இதற்கிடையே கோபால் சுப்பிரமணியமே தனது தனது பெயரை அவர் வாபஸ் பெற்றூக் கொண்டார். எனவே அவர் பெயர் குறித்து சர்ச்சை ஒன்றுமில்லாதது.

  ஆதாரங்கள்:

1.        President convinced of government stand on Subramanium, approves 3 names as SC judges http://articles.economictimes.indiatimes.com/2014-06-27/news/50912248_1_president-pranab-mukherjee-niira-radia-upa-government
3.        Letter by J.Gopikrishnan made the block to Gopal Subramanium’s elevation. http://indianexpress.com/article/india/india-others/to-replace-collegium-govt-gives-fresh-push-to-judicial-commission/99/


4. PRESS STATEMENT ISSUED BY BJP NATIONAL SPOKESPERSON AND MP, SHRI PRAKASH JAVADEKAR Saturday, 13 November 2010  http://www.bjp.org/en/media-resources/press-releases

No comments:

Post a Comment